• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் பதிவால் திருமணத்தின் அடையாளத்தை கண்டுபிடித்த தம்பதி

August 26, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகணத்தை சேர்ந்தவர் மிக்கி வால்ஷ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி, ஓசன் சிட்டி என்னும் கடல் பகுதியில், தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்றிருந்தார். எப்போதும் கடலுக்குள் செல்லும்போது, தனது மோதிரத்தை கழற்றி வைத்துவிடுவார். ஆனால், அம்முறை அதை தனது கையிலிருந்து கழற்றவில்லை. கடலில் தனது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது, அவருடைய மோதிரம் தண்ணீரில் காணாமல் போய்விட்டது.

திருமண மோதிரம் தொலைந்ததால் மிகவும் மனஉளைச்சலில் இருந்தார் மிக்கி வால்ஷ். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கடல் கரையிலிருந்த அந்த மோதிரத்தை 11 வயது டேனியல் பார் என்ற சிறுவன் கண்டுபிடித்து, தனது தாயிடம் கொடுத்தான். இதையடுத்து அந்த மோதிரத்தை அதன் உரிமையாளரிடம் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, “ஆண்கள் அணியும் திருமண மோதிரம் ஒன்றை நியூஜெர்சி மாகாணத்தின் ஓசன் சிட்டி கடற்கரையில் என் மகன் கண்டுபிடித்தான். அந்த மோதிரத்தின் உரிமையாளரை கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று டேனியலின் தாய், க்ரிச்டேன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அந்த பதிவை கண்ட மிக்கி வால்ஷின் மனைவி, உடனே அவருடைய கணவரை தொடர்புகொண்டு அது குறித்து தகவல் தந்தார். உடனே வால்ஷ், கிரிஸ்டனை தொடர்புக்கொண்டு, அந்த மோதிரத்தின் அடையாளங்களை குறித்து தெரிவித்தார். வால்ஷின் மனைவி, தனது கணவரின் காணாமல் போன மோதிரத்தின் புகைபடத்தை அனுப்பினார். அந்த புகைப்படத்திலிருந்த மோதிரமும், டேனியல் கண்டுபிடித்த மோதிரமும் ஒன்றாக இருந்தது.

இதனைத்தொடர்ந்து டேனியல் மற்றும் அவனுடைய தாயார் கிறிஸ்டன் வால்ஷ் தம்பதினரை சந்தித்து, அந்த மோதிரத்தை ஒப்படைத்துள்ளனர். திருமணத்தின் அடையாளமாக இருந்த மோதிரம் மிக்கி வால்ஷ்க்கு ஒரு பேஸ்புக் பதிவால் மீண்டும் கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

மேலும் படிக்க