• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்கில் கடிதம் எழுதிய பேஸ்புக் நிறுவனர்

August 29, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், தனக்கு பிறந்த இரண்டாவது மகளுக்கு எழுதிய கடிதத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் மனைவி பிரிஸ்சில்லா சான்(32)க்கு நேற்று(ஆகஸ்ட் 28)ம் தேதி, இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ஆகஸ்ட் மாதத்தில் பிறந்ததால், அந்த குழந்தைக்கு ‘ஆகஸ்ட்’ என்று பெயர் சூட்டினர். அந்த குழந்தையை வரவேற்கும் விதமாக இருவரும் சேர்ந்து கடிதம் ஒன்றை எழுதி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

அதில் “குழந்தை பருவம் அற்புதமானது. அந்த பருவம் ஒரு மனிதரின் வாழ்கையில் ஒரு முறைதான் வரும். அந்த பருவத்தை மகிழ்ச்சியுடன் செலவிட வேண்டும். நீ பிறந்துள்ள உலகம் உனக்கு ஒரு சிறந்த இடமாகயிருக்க, பெற்றோர்களாகிய நாங்கள் எங்களால் ஆன அனைத்தையும் செய்வோம். நீ வளர்ந்த பிறகு, வீட்டிலுள்ள தோட்டத்திலிருக்கும் பூக்களின் வாசனையை நுகர்ந்து மகிழ நேரம் செலவிடுவாய் என்று நம்புகிறாம்.

வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் எத்தனை முறைய ஓடி விளையாட முடியோமோ அதனை முறையும் விளையாடலாம். உன்னுடைய தூக்கத்தில் வரும் கனவுகளில், நாங்கள் உன்னை எவ்வளவு அன்பு செய்கிறோம் என்பதையும் காண்பாய்” என்று மகளுக்கு எழுதிய கடிதத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் எழுதியுள்ளார்.

தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, மகளுடன் சில நாட்கள் செலவிட இரண்டு மாதம் தனது பணியிலிருந்து விடுப்பு எடுப்பதாக மார்க் ஜுக்கர்பெரக் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 2௦15ம் ஆண்டு, அவருடைய மூத்த மகள் ‘மேக்ஸ்’ பிறந்தபோதும், அவர் தனது பணியிலிருந்து இரண்டு மாதம் விடுப்பு எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க