September 18, 2018
தண்டோரா குழு
அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்த பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட மாடல், பின் உடனடியாக பிரவதிற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
சைமன் தாம்சன் என்றும் அழைக்கப்படும், ஸ்லிக் வுட்ஸ் எனும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி மாடலான இவர், சமீபத்தில் நடந்த நியூயார்க் பேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல மாடல் அழகிகள் வண்ணமிகு உடையணிந்து பார்ப்போரை கண்ணை கவரும் வகையில் பேஷன் ஷோவில் ஒய்யார நடையில் நடந்தனர்.
இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்ட 22 வயதான சைமன் தாம்சன் கருப்பு நிற எளிய உடையை அணிந்து பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ்ச்சியில் இருந்து நேராக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு சபிர்(Saphir) என்று பெயர் சூட்டியுள்ளனர். சைமனின் கணவர் அடோனிஸ் போஸ்ஸோவும் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.