• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

September 11, 2020 தண்டோரா குழு

கோவை பேரூர் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு முட்செடி மற்றும் செடிகள் அதிகம் வளர்ந்த நிலையில் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்று உள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வருவதை கண்டு நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில் என்ற ஊழியர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கிணற்றில் தவறி விழுந்த இறந்தாரா? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க