• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு

August 24, 2017 தண்டோரா குழு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்குஒரு மாதம் பரோல் வழங்கியது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில்குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்க பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்திரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பேரறிவாளன் தாயார் கோரிக்கை மனுவை ஏற்று அவரை பரோலில்விட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை கிடைத்தவுடன் அவர் பரோலில் விடுவிக்கப்படுவார் என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்கூறியுள்ளார்.

மேலும் படிக்க