• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் பிறந்தநாள் – கோவையில் தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் மரியாதை

September 17, 2020 தண்டோரா குழு

பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்ட தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ வே ராமசாமியின் 142வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.அவரது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் அப்பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவையில் வெவ்வேறு இடங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும் படிக்க