• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் பயணிக்கு முத்தம் கொடுத்த பா.ஜ.க முன்னாள் அமைச்சர் கைது

July 5, 2017 தண்டோரா குழு

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவக்கு பா.ஜ.க முன்னாள் அமைச்சர் முத்தமிட்ட காணொளி காட்சி வெளியானதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பா.ஜ.க அமைச்சர் ரவீந்திர பவந்தடே(46), ஜூன் மாதம் 27ம் தேதி மகாராஷ்டிராவிலிருந்து நாக்பூர் செல்ல பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை முத்தமிட்டு, தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி பேருந்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நாக்பூரில் இறங்கிய அந்த பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை ஏற்ற அவர்களும் அதை விசாரித்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய அந்த சம்பவத்தின் அடிப்படையில் பா.ஜ.க முன்னாள் அமைச்சரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரவீந்திர பவன்தாடே சில மாதங்களுக்கு முன் பா.ஜ.க கட்சியிலிருந்து நீக்கிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க