• Download mobile app
11 Oct 2026, SundayEdition - 3896
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்கள் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

January 26, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் வசந்தம் நகர் கிளையும் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையும் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

குனியமுத்தூர் வசந்தம் நகர் வர்க்கி கம்பெனி அருகிலுள்ள மதரஸதுத் ஹிதாயா அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமை ஜமாஅத் கிளைத் தலைவர் இஸ்மாயில் மற்றும் பிஎஸ்ஜி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் அருண் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த மருத்துவ முகாமில் பிஎஸ்ஜி மருத்துவமனையின் மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவக் குழு பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், கண் மற்றும் கண் புரை, பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சை இலவச பரிசோதனை மற்றும் மருத்தவ ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த முகாமின் அவசியத்தைப் பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தின் கோவை மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காஜா விளக்கினார். இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் படிக்க