• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்தோடு விடுப்பு

July 13, 2017 தண்டோரா குழு

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் முதல் நாளில் சம்பளத்தோடு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பையின் இரண்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவது இயற்கை. அந்த நேரத்தில் பெண்களுக்கு அதிக உடல் சோர்வும் மன சோர்வும் ஏற்படும். அதிக வயிற்று வலியும் இரத்த போகும் அதிகமாக இருக்கும். வேலை நிமித்தமாக அந்த நாட்களில் விடுப்பு எடுக்க முடியாமல், வலியோடு பணிக்கும் வரும் கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த Culture Machine என்னும் நிறுவனம், அதன் பெண் ஊழியர்கள் மாதவிடாயின்போது, படும் வேதனைகளை காணொளியாக எடுத்து அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் ‘Blush’ யின் வெளியிட்டது. அந்த காணொளியின் முடியில்,மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

“பெண்கள் மாதவிடாய் குறித்து சமுதாயத்தில் பல தவறான கருத்துக்கள் உண்டு. அதன் உண்மையை சந்திக்கும் நேரமிது. அது ஒரு தர்மசங்கடமான நிலையல்ல, அது வாழ்வின் ஒரு பகுதி” என்று Culture Machine நிறுவனத்தின் மனித வளங்களின் தலைவர் தேவ்லீனா எஸ். மஜும்தர் தெரிவித்தார்.

Culture Machine நிறுவனத்தைபோல், Gozoop என்னும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க