• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு

July 23, 2019

பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் கமிஷன்ர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் கமிஷன்ர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்

இன்று முதல் ஜூலை 25 மாலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும். தடை உத்தரவை முன்னிட்டு, அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் மீது த்குந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க