• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மாவட்டஆட்சியரிடம் மஜக இளைஞரணி நிர்வாகிகள் மனு!

October 2, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மாவட்டஆட்சியரிடம் மஜக இளைஞரணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுவிற்கு எதிரான பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் ஒத்தகால்மண்டபத்தை அடுத்த மயிலேரிபாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர்பாஷா, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மேலும் மஜக வின் மது எதிர்ப்பு பரப்புரை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி மதுவின் தீமைகளை எடுத்துரைத்தனர். மஜக வினரின் இச்செயலை மாவட்ட ஆட்சியரும் கூடி இருந்த பொதுமக்களும் பாராட்டினர். இந்நிகழ்வில் இளைஞரணி மாவட்ட பொருளாளர் பிரோஸ், மாவட்ட துணை செயலாளர்கள் பைசல், சதாம், கிணத்துகடவு பகுதி இளைஞரணி செயலாளர் சாதிக், செய்யது இப்ராஹிம், நாசர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க