• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி டெல்லியில் கைது!

March 22, 2019 தண்டோரா குழு

புல்வாமா கொடூர தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்த்த பயங்கரவாதி சஜத்கான் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப் 14ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சேர்ந்த சஜத்கான் புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாகவே டெல்லி வந்ததாகவும், பிப்.14ம் தேதி தாக்குதல் நடக்கும் வரை மறைமுகமாக செயல்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் இன்று அவனை கைது செய்துள்ளனர். மேலும் சாஜித் கான் என்ற பெயரில் அவன் டெல்லியில் ஷால் விற்பனை செய்பவனாக வசித்து வந்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வேலையில் கைது செய்யப்பட்ட சஜத்கானிடம் விசாரணை நடத்தியதில் அவன், போலியான மொபைல் எண் மட்டம் ஆப் மூலமாக முடாசிரின் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி யாசிருடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க