• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புத்துணர்வு முகாம் நிறைவு – நண்பர்களை சோகத்துடன் கிளம்பிய யானைகள்

February 1, 2020

மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாம் நேற்றுடன் கிளம்பியது.

தமிழக கோவிகள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கான 8 வது சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கியது. இம்முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 28 யானைகள் கலந்து கொண்டு கொண்டன. 48 நாட்கள் நடைபெற்ற இந்த யானைகள் சிறப்பு முகாம் நேற்று நிறைவடைந்தது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தமிழக கோவில் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. முதலில் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் முகாம் நடைபெற்ற நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தில் பவானி ஆற்றின் படுகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 8 வது புத்துணர்வு முகாம் கடந்த 15 ந்தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெற்று வந்தது.இதில் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 28 யானைகள் கலந்து கொண்டது.முகாமில் யானைகளுக்கு 48 நாட்கள் முழு ஓய்வு சமச்சீர் உணவுகள் பசுந்தீவனங்கள் பாசிப்பயிறு கொள்ளு அரிசி போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. தினமும் நடைபயிற்சி ஷவர் குளியல் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது. முகாம் நிறைவடைவதை முன்னிட்டு காலை யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் கஜ பூஜை நடத்தப்பட்டு யானைகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. இதன் பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட யானைகளை அந்தந்த கோவில்களுக்கு அனுப்பி வைக்க லாரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மாலை ஐந்து மணியளவில் நடைபெறும் வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன்,நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு அமலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,மாவட்ட ஆட்சியர் ராசாமணி,இந்து அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி,இணை ஆணையர் ராஜாமணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு யானைகளை அந்த அந்த ஊர்க்கு வழியனுப்பி வைத்தனர்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த யானைகள் புத்துணர்வு முகாமில் 48 நாட்கள் குதூகலமாக இருந்தது. இதையடுத்து, நண்பர்களை பிரிந்து யானைகள் சோகத்துடன் கிளம்பியது.

மேலும் படிக்க