• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி 7 அடி உயர சாக்லெட் ஸ்பைடர்மேன் சிலை !

December 26, 2018 தண்டோரா குழு

புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பேக்கரி ஒன்றில் 7 அடி உயரத்தில் சாக்லெட்டால் செய்யப்பட்ட ஸ்பைடர்மேன் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மிஷன் வீதியில் உள்ள ஜூகா (zukaa) என்கிற சாக்லேட் பேக்கரியில், ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்று, பல்வேறு பிரபலங்களின் உருவங்களை சாக்லெட்டால் வடிவமைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, 7 அடி உயரத்தில் சாக்லெட்டைக் கொண்டு ஸ்பைடர் மேன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பேக்கரிக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ள இந்த சாக்லெட் ஸ்பைடர் மேன் சிலையை, அங்கு வரும் குழந்தைகள் ரசித்து செல்கின்றனர். அந்த சிலையுடன் அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொள்கின்றனர்.

362 கிலோ சாக்லெட்டால் செய்யப்பட்ட இந்த சிலையை வடிவமைக்க 158 மணி நேரம் ஆனதாக பேக்கரி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க