February 21, 2019
தண்டோரா குழு
புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது.
சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உடன் ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது. இதையடுத்து, அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ் இடையை மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் அதிமுக கூட்டணியில்
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதனால், தற்போது புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.