• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

December 15, 2018 தண்டோரா குழு

புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் தரைக்காற்று பலமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ‘பெதாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கி நாடா இடையே டிசம்பர் 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக டிசம்பர் 15,16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் தரைக்காற்று வீசும் என தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க