September 18, 2025
தண்டோரா குழு
டாடா நிறுவனத்திலிருந்து பெண்களின் பாரம்பரிய உடைகள் நிறுவனமாகப் புகழ்பெற்ற தநைரா பண்டிகைக்கால புடவைத் தொகுப்பான ’மியாரா’ வை புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மியாரா புடவைகள் நெசவு கைவினைஞர்களின் கைகளால் நெய்யப்பட்ட,தூய்மையின் அடையாளமான புடவைகளாக அறிமுகமாகியுள்ளன. இன்றைய நவநாகரிக பெண்களுக்காகவே கைவினைக் கலைஞர்களால் பிரத்தியேகமாக நெய்யப்பட்ட இந்த புடவைகளின் வகைகள் இன்றைய காலகட்டத்தின் நவீன வடிவமைப்புகளை, நம்முடைய பாரம்பரிய கலைநயத்தோடு ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் புடவைகள், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த பட்டு மற்றும் பருத்தி நெசவு மரபுகளையும், பல்வேறு கைவினை திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில், மியாரா சேலைகள் ஒவ்வொரு பண்டிகைகளின் கொண்டாட்டங்களை உணரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் புடவைகளின் உன்னதமான அனுபவத்தை நீங்கள் கொண்டாடலாம் அல்லது உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஆச்சர்யம்ளிக்கும் பரிசாக கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கலாம்.
பண்டிகைக் கால கொண்டாட்டத்தை மேலும் உற்சாகமானதாக மாற்றும் வகையில் ‘தி கிஃப்ட் ஆஃப் பியூர் லவ்’ என்ற தநைராவின் சமீபத்திய பிரச்சாரமானது, புடவையை பண்டிகைகளின் போது நம்முடைய மாறாத அன்பின் பரிசாக அளிக்க உற்சாகப்படுத்துகிறது. பரிசளிப்பதின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் தருணத்தை இப்பிரச்சாரம் வலியுறுத்துகிறது.
இது நேசத்துக்கு மரியாதை அளிக்கும் விதமாக தநைரா புடவையைப் பரிசளிக்கலாம் என்பதை ஞாபகப்படுத்தும் பிராண்டின் முயற்சி இது. நம்முடைய அன்பிற்குரியவர்களின் உணர்வுக்கு மரியாதை அளிக்கும் வகையில், நாம் ஒருவர் மேல் கொள்ளும் நேசத்தையும் நேசிப்பவரின் அரிய தன்மையையும் வெளிப்படுத்தும் விலைமதிப்பற்ற உணர்வு இது. எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாத தூய்மையான அன்பை நாம் பார்க்கமுடியாது, ஆனால் அதை உணரமுடியும்’ என்பதை இந்தப் பிரச்சாரம் முன்மொழிகிறது.
தநைராவில் வாங்கும் ஒவ்வொரு புடவையையும் மறக்க முடியாத தருணமாக்கும் வகையில், பண்டிகைக்கால சிறப்பு தள்ளுபடிகளையும், பரிசு கூப்பன்கள் மற்றும் தங்க நாணயங்களுடன் இந்த மாபெரும் விற்பனை திருவிழாவில் அறிமுகப்படுத்துகிறது தநைரா.. வாடிக்கையாளர்கள் மொத்தமாக 10,000 ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு முறை வாங்கும் போதும், அவர்களுக்கு 1,000 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் அடுத்த முறை தநைராவில் புடவைகளோ அல்லது ஆடைகளோ வாங்கும் போது இந்த வவுச்சர்களை பயன்படுத்தி தள்ளுபடி சலுகையைப் பெற முடியும். 50 ஆயிரத்துக்கு மேல் வாங்குபவர்களுக்கு 0.2 கிராம் தனிஷ்க் தங்க நாணயம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலம் வரை மட்டும் வழங்கப்படும் இந்த தள்ளுபடி சலுகை அக்டோபர் 20, 2025 வரை மட்டுமே பொருந்தும்.
இந்த தள்ளுபடி அறிமுகத் திட்டத்தைப் பற்றி தநைராவின் தலைமைச் செயல் அதிகாரி அம்புஜ் நாராயண் பேசும்போது,
“இந்த பண்டிகைக் காலத்தில் நாங்கள் ‘மியாரா’ புடவைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். கலைநயம் கலந்த கற்பனை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட அழகியலை பல்வேறு புடவைகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களது பிரத்தியேகத் தள்ளுபடிகளின் வாயிலாகவும், கோல்டன் குக்கூன் திட்டம் மூலமாகவும், இந்த பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் உணர்வுப்பூர்வமான பரிசாக அளிப்பதற்கு ஏற்ற வகையில் தநைராவின் புடவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். புடவைகளுக்கான சந்தையில் உள்ள ஆத்மார்த்தமான உணர்வின் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதன் மூலம், இந்த பண்டிகைக் காலத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.