• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய தலைமுறை மீதான வழக்கு அரசு அடக்குமுறையை கையாளுகிறது – தங்கதமிழ்ச்செல்வன்

June 12, 2018 தண்டோரா குழு

விவாதம் நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்றும், அதற்கு இதுபோன்ற புதிய தலைமுறை மீதான வழக்கு அரசு அடக்குமுறையை கையாளுவதாகவும்,அரசை கண்டிக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உயர் நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகரை கைது செய்யப்படாததை சுட்டிக்காட்டியவர், ஊடகங்கள் பயத்தில் மக்களுக்கு உண்மையை சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும்,மத்திய, மாநில அரசு நேர் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும்,தேர்தலின் போது மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார் என்றும்,இது ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா என்று கேள்வி எழுப்பினார்.

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை முக்கியம் இல்லை என்றும்,அதற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தலாம்.காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதே தற்போது முக்கியம்.தஞ்சை டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி., திட்டம்,மணல் கொள்ளை,நியூட்ரினோ திட்டம்,ஊழல் செய்வதை நிறுத்தினால் மக்களுக்கு வேண்டிய திட்டங்கள் கிடைக்கும்.

திவாகரன் தனிக்கட்சி துவங்கியதில் உபயோகம் இல்லை என்றவர்,தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தொடர்பான வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்காமல் நீதிமன்றம் தாமதம் செய்கிறது.மத்திய அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுகிறாதா,எந்த தீர்ப்பானலும் அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க