• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய கட்சியைத் தொடங்கினார் டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் – மோடிக்கு ஆதரவு !

September 15, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரனின் தம்பியும் நடிகருமான பாஸ் (எ) பாஸ்கரன் சென்னை நீலாங்கரை புளூ பீச் சாலையில் உள்ள அவரது வீட்டில் புதிய கட்சியை துவங்கி கொடியை அறிமுகம் செய்தார்.

தமிழகத்தில் அண்மைகாலமாக புதிதாக நிறைய அரசியல் கட்சிகள் உதயமாகி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய கட்சி ஓன்று உதயமாகியுள்ளது. டிடிவி தினகரனின் தம்பியும் நடிகருமான பாஸ் (எ) பாஸ்கரன் சென்னை நீலாங்கரை புளூ பீச் சாலையில் உள்ள அவரது வீட்டில் அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம்’ என்ற கட்சியை துவங்கி கொடியை அறிமுகம் செய்தார். கொடியில், மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு வண்ணத்தில், நடுவில் எம்ஜிஆர் படம் இருக்கிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“எம்ஜிஆர் அண்ணா வழியில் ஊழலற்ற நிர்வாகத்தை தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன். எம்ஜிஆர் தொண்டர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ளேன். ஆகஸ்ட் 30-ம் தேதி கட்சி துவங்க திட்டமிட்டிருந்தேன் ஆளும் கட்சியினர் பதட்டமடைந்து அந்த மாநாட்டிற்கு பல இடையுறுகள் கொடுத்தனர். இதனால் மாநாடு நடைபெறவில்லை. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி யார் செய்ய நினைத்தாலும் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவேன். நாங்கள் நிர்வாகத்திற்கு வந்தால் தனி தனி துறைக்கு நிதி ஒதுக்குவோம் என்றார்.

மேலும், மீண்டும் மோடியை பிரதமராக்கப் பாடுபடுவேன். ஊழலற்ற இந்தியாவின் இறையான்மையை காக்கும் மோடிக்கு எனது முழு ஆதரவு. 15 வருடம் குஜராத்தில் முதல்வராகவும், 4 வருடம் இந்திய பிரதமராக இருக்கும் மோடி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க