• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய இணைய தளத்தை துவங்கியது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

May 8, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தனது கல்லூரிகள் இயக்குநரகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த சமீபத்திய தகவல்களுடன் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை
மீண்டும் வடிவமைத்து புதுப்பித்துள்ளது.

இப்புதிய இணையதளத்தைத் தொடங்க கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகத்தின் கமிட்டி அறையில் இன்று
துணைவேந்தர் முனைவர்.குமார் தலைமையிலான பல்கலைக்கழக
அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.வேளாண் பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர். பா. ஸ்ரீதர் கூட்டத்தை வரவேற்று புதிய இணையதளத்தின்
வடிவமைப்பைக் குறித்து விளக்கினார். துணைவேந்தர்,தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து அதன் சிறப்பம்சங்களையும்,
பயன்பாட்டையும் குறித்து உரையாற்றினார்.

இப்புதிய இணையதளத்தை உருவாக்க இயல் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார். இப்புதிய
இணையதளத்தை, பழைய இணையதளமான www.tnau.ac.in இணைப்பிலிருந்து TNAU New website என்ற சுருள் செய்தியைக் கிளிக் செய்வதன் மூலம் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க