• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிதாக அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கள ஆய்வு !

July 28, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இன்று
மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின்படி மத்திய மண்டலம் கே.ஜி.வீதி பகுதியில் கடைகளில் முன்பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தும் இடமாக அமைக்க உத்தரவிட்டார்.

மேலும், அண்ணா நகர், காந்திநகர், முத்தமிழ் நகர் மற்றும் தண்ணீர் பந்தல் 4வது வீதி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதைப்போல் சிங்காநல்லூர் திருச்சி சாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தையும், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் மற்றும் இதர வசதிகள் குறித்து பறக்கும் படை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க