• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தினவிழா

September 30, 2024 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் டாக்டர் டி.எம். சுப்பாராவ் வரவேற்புரை ஆற்றினார்.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.நிகழ்ச்சியில் சென்னை கீழ்பாக்கம் லைஃப்லைன் குரூப் ஹாஸ்பிடல் தலைவர் டாக்டர் ஜே. எஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில்,பல்வேறு மருத்துவத்துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்களான கொச்சியில் உள்ள அப்பல்லோ அட்லக்ஸ் மருத்துவமனை ரோபோட்டிக் – லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிறுவனர் டாக்டர் ஊர்மிளா சோமன்,சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை பேராசிரியர் டாக்டர் எம்.மலர்விழி,கோயம்புத்தூர் எஸ் ஜி கேஸ்ட்ரோ கேர் நிறுவனர் டாக்டர் எம். கணேஷ்,கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை உடல் பருமன் மற்றும் நீரிழிவு மையத்தின் தலைமை ஆலோசகர் டாக்டர் எஸ்.சரவணகுமார் ஆகியோர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பி. எஸ்.ஜி மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் ஜி.சுமித்ரா நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி குழுமத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க