• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் 30வது பட்டமளிப்பு விழா

October 29, 2022 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் 30வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் இன்று காலை
நடைபெற்றது.கல்லூரி முதல்வர் டாக்டர் டி.எம் சுப்பாராவ் வரவேற்புரையாற்றினார். பி.எஸ்.ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.

ஹைதராபாத் கிம்ஸ் உஷாலக்ஷ்மி மையம், கிம்ஸ் மருத்துவமனை மார்பக நோய்களுக்கான
இயக்குனர் மற்றும் ஆலோசகர்
டாக்டர் பி.ரகுராம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு உரை ஆற்றினார்.
தொடர்ந்து அவர் சுமார் 145 எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் மற்றும் 60 முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு பல்வேறு கல்வி விருதுகள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

2022ம் ஆண்டிற்கான ஜி.ஆர்.ஜி மெமோரியல் தங்கப் பதக்கத்தை,சிறந்த ஆல்ரவுண்டர் பட்டதாரி கே.பூரணி பெற்றார். மாணவி நவீனா சிறந்த சாதனை பட்டதாரிக்கான ஜி.வி நினைவு தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.இயற்பியல் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். விஜயபாஸ்கரன், பேராசிரியர் டாக்டர் ஜி.ரகுதமன் ஆகியோர் பேசினர். இறுதியில் துறை தலைவர் டாக்டர் எஸ்.சாந்தகுமாரி நன்றியுரை கூறினார்.

மேலும் படிக்க