• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எப்.ஐ.அமைப்பை தடை செய்ததை வரவேற்று 108 தேங்காய் உடைத்து வழிபாடு

September 29, 2022 தண்டோரா குழு

நாடு முழுவதும் உள்ள பி.எப்.ஐ.அமைப்பை தடை செய்ததை வரவேற்று கோவையில் அகில பாரத மக்கள் கட்சியினர் கோவை சித்தி விநாயகர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் அடிப்படையில், இந்த அமைப்பிற்கு நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புக்களும் வரவேற்ற நிலையில், கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக அதன் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில், கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

இது குறித்து ராமநாதன் கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று. 108 தேங்காய் உடைத்து கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ததாக தெரிவித்தார்.. இதில் அகில பாரத மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா,துணை தலைவர் சேகர்,மற்றும் பூசாரிகள் சங்க தலைவர் பூபதி ராஜ், வடவள்ளி மண்டல நிர்வாகிகள் வினோத் நவீன் ஸ்ரீராம் கோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க