• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஹார் PHED  எஞ்சினியரிங் தேர்வில் முதல் இடம் பிடித்த நடிகை சன்னி லியோன் !

February 21, 2019 தண்டோரா குழு

கனடாவில் பிறந்த பிரபல நடிகை சன்னி லியோன், பிஹார் அரசாங்க இளநிலைப் பொறியாளர் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் பிறந்து பாலிவுட்டில் கலக்கி வரும் ஆபாச பட நடிகை நடிகை சன்னி லியோன் தற்போது தமிழில் ஒரு படம் நடித்து வருகிறார்.இதற்கிடையில், அண்மையில் பிஹார் மாநிலத்தில் 200 இளநிலை பொறியாளர்களுக்கான பொது சுகாதாரத்துறையின் பொறியாளர் பிரிவு தேர்வு நடைப்பெற்றது. இதில், 17,911 பேர் விண்ணப்பித்திருந்தனர், பின்னர் அதிலிருந்து 642 பேர் அடுத்த தேர்வுக்கு இறுதி செய்யப்பட்டனர்.

இதையடுத்து, பிஹார் பொது சுகாதாரத்துறையின் பொறியாளர் பிரிவு வலைதளமான phed.bih.nic.in இந்த தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்பட்டியலில் இப்பட்டியலில் கனடாவில் பிறந்த நடிகை சன்னி லியோன் 98.5% மதிப்பெண்களோடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. சன்னி லியோன் கல்வியில் 73.5% மதிப்பெண்களும் அனுபவத்தில் 25% மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இப்பெயர் பட்டியலில் இவர் சன்னி லியோன் தான் என்பதை உறுதிப்படுத்த அவரது தந்தை பெயராக லியோனா லியோனா-வும் இடம்பெற்றுள்ளது. அதைபோல், மூன்றாவது இடத்தில் “bvcxzbnnb” என்னும் நபர் 92.89% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஊர் பெயர் அறியாத இவரின் தந்தை பெயர் “mggvghhnnnn” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில், இது குறித்து பிஹார் பொது சுகாதாரத்துறை அதிகாரி அசோக் குமார் விளக்கமளித்துள்ளார். ”பட்டியலில் யாரோ தவறான தகவல்களை இணைத்திருக்கிறார்கள். இது ஆன்லைனில் தேர்வாளர்கள் அளித்த தற்காலிகப் பட்டியல்தான். தவறு களையப்பட்டு இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தேர்வு முடிவு பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதை கண்டு வியந்துள்ள சன்னிலியோன். இது குறித்து டுவீட் செய்துள்ளார்.அதில், ”ஹாஹா, என்னுடைய இன்னொரு ‘அவதாரம்’ நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க