• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் பயன்பாடு முறையை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி மனு

September 23, 2019

பிளாஸ்டிக் பயன்பாடு முறையை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு அண்மையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தற்போது உணவகங்களில் பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகள், ஸ்பூன்கள் என அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்துள்ளது.மேலும் சாம்பூ,எண்ணெய்,வாட்டர் பாட்டில் மற்றும் தின்பண்டங்கள் போன்றவற்றை அடைத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று கோவையில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி,

சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் உபயோகிக்கும் கடைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க