• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பில் பாக்கி விரைவாக வழங்க மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தல்

December 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் உட்பட கலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துவது எனவும் கோவை நகரில் முக்கிய பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது எனவும் மாநகராட்சி எல்லையில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு இலவசமாக பாய், சாப்பாடு தட்டு, டம்ளர் போன்ற பொருட்களை வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கோவை மாநகராட்சி கமிஷனரை சந்தித்து நிலுவையில் உள்ள பில் தொகை மற்றும் பில்லில் பிடித்தம் செய்த 5 சதவீத தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல் தொகையுடன் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை 12 சதவீதத்தை 18 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

சங்க உறுப்பினர் நந்த கோபால் மறைவுக்கு இந்த கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாநகராட்சியில் நடக்கும் திட்டப் பணிகள், பில் பாக்கி இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க