• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறவி போராளி கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – பினராயி விஜயன்

July 28, 2018 தண்டோரா குழு

பிறவி போராளி கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது.தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதனால் பல்வேறு அரசியல் கட்சி நேரில் சென்று அவர் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்,, கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் கருணாநிதி குறித்து தனது ட்விட்டர் பதிவில்,

திமுக தலைவர் கருணாநிதி பிறவி போராளி. அவர் போராடி விரைவில் குணமடைவார் என நம்பிக்கையுள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க