• Download mobile app
07 Jan 2026, WednesdayEdition - 3619
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா (Revia) வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளச்சுகள் அறிமுகம்

January 6, 2026 தண்டோரா குழு

பிரேக்ஸ் இந்தியா, தனது மொபிலிட்டி செல்யூஷன் தொகுப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் பல்வகை ஓட்டுநர் சூழ்நிலைகளில் இயங்கும் வணிக வாகனங்கள்,லாரிகள் மற்றும் பேருந்துகளின் கடுமையான செயல்திறன் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ரீவியா (Revia) கிளட்ச்சுகளை அறிமுகம் செய்துள்ளது.

உயர்தர உராய்வு பொருட்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட ஸ்பிரிங் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ரீவியா கிளச்சுகள்,கனமான சுமைகள், கடுமையான ஏற்றங்கள், நெரிசலான நகர போக்குவரத்து மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் ஆகியவற்றில் கூட உறுதியான நீடித்த தன்மை, சிறந்த வெப்ப சிதறல் மற்றும் நிலையான சக்தி பரிமாற்றத்தை வழங்குகின்றன.

நீண்ட சேவை ஆயுள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால்,இவை வாகனக் குழு இயக்குநர்களுக்கு நிறுத்த நேரத்தை குறைத்து, பராமரிப்பு செலவுகளை குறைத்து வாகன பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்க உதவுகின்றன.
“ரீவியா கிளச் தட்டுகள் மூலம், சக்கரத்தைச் சுற்றிய முக்கிய தயாரிப்புகளை உள்ளடக்கும் எங்கள் மூலோபாயத்தில் பிரேக்ஸ் இந்தியா இன்னொரு தீர்மானமான அடியெடுத்து வைக்கிறது. பிரேக் அமைப்புகளிலிருந்து கிளச் வரை, இந்தியாவுக்கான முழுமையான இயக்கத் தீர்வுகளை வழங்கும் எங்கள் வாக்குறுதியை வலுப்படுத்துகிறோம்.

ஒரு வாகனத்தை நிறுத்துவதில் எங்கள் நம்பகத்தன்மைக்காக நீண்ட காலமாக அறியப்பட்டுள்ளோம்; இப்போது அதே நம்பிக்கையை வாகனத்தை இயக்கும் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துகிறோம்,” என பிரேக்ஸ் இந்தியா ஆப்டர் மார்க்கெட் வணிக பிரிவின் மூத்த துணைத் தலைவரும், தலைவருமான எஸ்.சுஜித் நாயக் தெரிவித்தார்.

கிளச் பிளேட்டின் முக்கிய அம்சங்கள்:

· மென்மையான இணைப்பு மற்றும் பிரிவு
· உயர்ந்த டார்க் பரிமாற்ற திறன்
· நீடித்த தன்மை மற்றும் நீண்ட ஆயுள்
· சிறந்த வெப்பத் தாங்கும் திறன்
· OEM தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிப்பு
பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட வாகன அமைப்புகளில் பல தசாப்தங்களான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரீவியா கிளச்சுகள், இந்திய சந்தைக்கு நம்பகமான, உயர்தர கூறுகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றன.

மேலும் படிக்க