• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரச்சரத்திற்காக தமிழகம் வருகை?

December 21, 2018

ஜனவரி மாத இறுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைப்போல் மோடி தலைமையில் நாடு முழுவதும்100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஜனவரி மாத இறுதியில் வர இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் தேதிகள் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்களை வெளியாகியுள்ளன. பிரதமரின் தமிழக வருகை அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க