• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிவி சிந்து !

August 27, 2019 தண்டோரா குழு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

5-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்றது. இதில், கடந்த 24-ம் தேதி
நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து. முதல் முறையாக தங்கம் வென்று நாடு திரும்பிய அவர், பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சர்வதேச அளவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த சிந்துவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பெருமைமிக்க பெண் சிந்து என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அதன் பின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சிந்து சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்திய அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை சிந்துவிடம் கிரண் ரிஜிஜூ வழங்கினார்.

மேலும் படிக்க