• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

April 26, 2019 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வாரணாசி மக்களவை தொகுதிக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட தகுதிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வேட்பு மனுவில், தனது மனைவியின் பெயர் யசோதாபென் என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, 1978ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், 1983ம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டமும், பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் காந்திநகரில் உள்ள 3,531 சதுர அடி வீட்டு மனை, வங்கியில் 1.27 கோடி ரூபாய்க்கு வைப்புத்தொகை, 38,750 ரூபாய் சேமிப்புத் தொகை உட்பட 2.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை”.1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், 1.1 கோடி ரூபாய் (காந்திநகரில் உள்ள வீட்டுமனை) மதிப்புள்ள அசையா சொத்துக்களும் தன்னிடம் உள்ளதாக வேட்பு மனுவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை எனவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 தேர்தலின் போது பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பாக 1.65 கோடி ரூபாயை அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க