• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

May 14, 2019

பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு வின் பண்ணை வீடான சின்னப்பம் பாளையத்தில் ஒரு மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஏற்கனவே சி டி சிஐடி போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது மாணவிகளை சீரழித்து ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டது இந்த வீட்டில் தான் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிஐ வசம் மாற்றபட்டதற்கு பிறகு பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் குற்றவாளிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மேலும் குற்றவாளிகளின் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெற்றோர்களிடமும் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். அதைப்போல் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள குற்றவாளிகள் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பண்ணை வீட்டில் தற்போது ஆய்வு செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் அக்கிராமத்தில் உள்ள அக்கம் பக்கம் உள்ள தோட்டங்களிலும் வீடுகளிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க