• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலக்காடு இளைஞர் போலந்து நாட்டில் கொலை

January 28, 2023 தண்டோரா குழு

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் போலந்து நாட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். பெற்றார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலக்காடு கஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப் மற்றும் ரிஷினா பானு. இவர்களது மகன் இப்ராஹிம் ஷெரிப். பத்து மாதங்களுக்கு முன்பு போலண்டு நாட்டிற்கு ஐ. என். ஜி. வங்கியில் பணிபுரிய சென்றுள்ளார். இவர் அந்த நாட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ‘வொர்க் பிரம் ஹோம்’ பணி புரிந்து வந்து உள்ளார். கடந்த 24 ஆம் தேதி அவர் தங்கியிருந்த வீட்டில் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர் 26 ஆம் தேதி அவர்களது தாயாருக்கு போலந்து நாட்டில் உள்ள மலையாளம் அசோசியேஷன் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது உடல் 7 நாட்களில் இருந்து பத்து நாட்களுக்குள் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கொண்டுவரப்படும் என அந்த நாட்டு எம்பாசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக போலந்து நாட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் பைனல் ரிப்போர்ட் விரைவில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிப்பார்கள் என போலந்து நாட்டு எம்பசி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க