• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு – கோவையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு !

September 30, 2020 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் உட்பட 49 பேர் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்தநிலையில் இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதையடுத்து,கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் மாநகர எல்லையில் 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும், சிஆர்பிஎஃப் போலீசாரும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுளள்னர்.

மேலும் படிக்க