• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் !

October 28, 2020 தண்டோரா குழு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவரின் பெயர் கூட இடம்பெறாதது அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க