• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார்பிரதமர் மோடி

June 19, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி ஆதரவு கேட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டம் இன்று கூடியது. இக்கூட்டத்தில் தே.ஜ. கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் பீகார் மாநில ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க