• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாக்.முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இருவருக்கு 17 ஆண்டுகள் சிறை!

August 31, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பெண் அரசியல் தலைவர் என்ற முத்திரையுடன் மக்கள் மனதில் நிலைத்தவர் மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ. பெண் என்றும் பாராமல் அரசியல் களத்தில் இறங்கி துணிச்சலுடன் செயல்பட்ட பெனாசீர் பூட்டோ, 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில், பெனாசிர் பூட்டோ அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான ‘மக்கள் கட்சி’யின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் தேர்தல் களத்தில் இருந்தார்.

தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்த பெனாசீர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்படுகொலை வழக்கில் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் நேற்று ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்தது.

இதனையடுத்து, இவ்வழக்கில் அந்நாட்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட டிஐஜி ஆசாத் மற்றும் ஷாஷெத் ஆகிய போலீசார் இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.மேலும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதுமட்டுமின்றி, இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க