• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் வான் வழியாக செல்ல இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுப்பு

September 7, 2019 தண்டோரா குழு

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வெளிநாடு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் திங்கட்கிழமை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அவரது வெளிநாட்டு பயணத்துக்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டனர்.

இந்நிலையில், இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது என வெளியுறவு துறை மந்திரி குரேஷி தெரிவித்துள்ளார்.மேலும்,கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியை மூடி வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க