• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய மொபைல் போன்களுக்கு 90 நாட்கள் வாரண்டியுடன் பில் – கோவையில் புதிய கடை திறப்பு

September 16, 2020 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலை பீளமேட்டில் உள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரி அருகில் ஏகே மொபைல்ஸ் அண்ட் பேக்ஸ் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பீளமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜோதி கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் குரூப் ஆப் கம்பெனிஸ் ஹாஜி கே.எஸ் அஹமத் கபீர் மற்றும் கோப்புலி குரூப்ஸ் கே.ஐ மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏகே மொபைல்ஸ் அண்ட் பேக்ஸ் ஷோரூமில், அனைத்து விதமான புதிய மற்றும் பழைய பிராண்ட் மொபைல்ஸ் போன்கள், பழைய மொபைல் போன்களுக்கு 90 நாட்கள் வாரண்டியுடன் பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து விதமான அக்சஸரீஸ்கள், பெண்கள் அதிகம் விரும்பக் கூடிய லேட்டஸ்ட் டிசைன்களில் ஹேண்ட் பேக்ஸ், இம்போர்ட் பேக்ஸ், பிராண்டட் பேக்ஸ், ஸ்லிம் பேக்ஸ், டிராவல் பேக், ஸ்கூல் பேக் மற்றும் லாப்டாப் பேக்ஸ் என அனைத்து விதமான பேக்ஸ்களும் ரூபாய் 100 முதல் கிடைக்கிறது. கண் கண்ணாடிகள், மோதிரங்கள், வாசனை திரவியப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏகே மொபைல்ஸ் அண்ட் பேக்ஸ் ஷோரூம் உரிமையாளர்கள், கலீல் ரஹ்மான் மற்றும் அபுதாஹீர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

துவக்க விழாவை முன்னிட்டு முதல் மூன்று நாட்களுக்கு 15 ரூபாயில் டெம்பர் கிளாஸ் மற்றும் இலவச முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.எங்களது ஷோரூம்களில் பழைய i phone மொபைல் வெறும் 5 ஆயிரம் ரூபாய் முதல் மாடல்களுக்கு ஏற்ற விலைகளில் கிடைக்கிறது. எங்கும் இல்லாத வகையில், பழைய மொபைல் போன்களுக்கு 90 நாட்கள் வாரண்டியுடன் பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மொபைல்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கான லேட்டஸ்ட் டிசைன்களில் ஹேண்ட் பேக்ஸ் கிடைக்கிறது. அனைத்து பேக்ஸ்களுக்கும் 50% வரை சலுகைகள் வழங்கபடுகிறது. மேலும் 90 நாட்கள் வாரண்டி மற்றும் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுகிறது என்றனர்.

மேலும் படிக்க