• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா காலமானார்

April 27, 2017 தண்டோரா குழு

புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபல இந்தி நடிகர் வினோத் கண்ணா மும்பையில் காலமானார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா(70). புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று மும்பையில் காலமானார். 1968 முதல் 2013ம் ஆண்டு வரை இந்தி திரையுலகில் தனது திரை பயணத்தை மேற்கொண்ட இவர் மொத்தம் 141 படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக ஷாரூக்கானுடன் தில்வாலே படத்தில் நடித்துள்ளார்.

பாஜகவை சேர்ந்தவரான வினோத் கண்ணா குர்தாவூஸ் தொகுதி எம்.பி.யாகவும்,2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இவரது மகன்களான ராகுல் கண்ணா மற்றும் அக்க்ஷய் கண்ணாவும் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க