• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

July 9, 2022 தண்டோரா குழு

கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (24). இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் 9ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவிகளை ஊட்டிக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோவை வந்து தங்கள் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிக்கை கைது செய்தனர்.

அவர் மீது கடத்திச்செல்லுதல், போக்சோ ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிக்குக்கு மாணவிகளை கடத்திச்சென்ற பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் ஆசிக்கை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க