• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை மீது போலீசில் புகார்!

November 3, 2018 தண்டோரா குழு

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியை மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 12 வகுப்பு மாணவன் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த முகப்பேரில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளியில், மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் படித்து வருகிறான். அம்மாணவனுக்கு அப்பள்ளியை சேர்ந்த 40 வயதான ஸ்மிதா என்ற கணினி ஆசிரியை பள்ளியிலேயே தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆசிரியை ஸ்மிதாவை, பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

எனினும், அந்த மாணவனுக்கு அந்த ஆசிரியை தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், மாணவனின் பெற்றோர் நொளம்பூர் காவல் நிலையத்தில், கணினி ஆசிரியை ஸ்மிதா மீது புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க