• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரிசு தொகையை இந்திய ராணுவ நல நிதிக்கு வழங்கிய சிறுவன்

August 4, 2017 தண்டோரா குழு

குவைத் நாட்டில் வசிக்கும் இந்திய மாணவன் தனக்கு கிடைத்த பரிசு தொகையை இந்திய ராணுவ நல நிதிக்கு தந்த சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குவைத் நாட்டில் ரித்திராஜ் குமார் என்னும் 3ம் வகுப்பு இந்திய மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.“Australian Council for Educational Research(ACER)” சமீபத்தில் “International Bench Mark Test for Learning Award for Excellence” என்னும் போட்டியை குவைத்தில் நடத்தியது.

இப்போட்டியில் பங்குபெற்ற ரித்திராஜ் குமார் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை சிறப்பான முறையில் செய்ததில்,வெற்றி பெற்றுள்ளான். வெற்றி பெற்ற அவனுக்கு 80KD இந்திய செலவாணிபடி 18,000 ரூபாய் பரிசு தொகை கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு வந்திருந்த ரித்திராஜ் தனது பெற்றோருடன், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று(ஆகஸ்ட் 3) சந்தித்து, இந்திய ராணுவ நல நிதிக்கு தான் பெற்ற பரிசு தொகை காசோலையை வழங்கியுள்ளான்.இந்த தொகையை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாணவனை பாராட்டினார். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை குறித்து இந்திய ஆசிரியர்களுக்கு இலவச கருத்தரங்குகளை “Every Child is Genius” என்னும் திட்டத்தை ரித்திராஜின் தாயார் நடத்து வருகிறார். அவர் செய்யும் இந்த தனலமற்ற சேவைக்காக அவரையும் பிரதமர் வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க