• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

January 24, 2022 தண்டோரா குழு

கோவை ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்தவர் முனுசாமி (38). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஒத்தக்கால் மண்டபம் முருகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். உணவு இடைவேளை ஓய்வின் போது அருகில் உள்ள பனைமரத்தில் நுங்கு பறிக்க ஏறினார்.

அப்போது திடீரென அவர், சுமார் 40 அடி உயர பனைமர உச்சியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க