• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பண மோசடி பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் கைது

June 28, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் நான் தான் என்று சொல்லிவந்தவர் பவர் ஸ்டார். இவர் நடிப்பது மட்டுமல்லாது சென்னையில் உள்ள வங்கிகளில் பணம் வாங்கித்தரும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.

2013ம் ஆண்டே ரூ.10 கோடி வாங்கி கொண்டு ரூ.1000 கோடி கடனாக வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீன் மூலம் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு போலீசாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில், “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங்கினார். ஆனால் சீனிவாசன் இதுவரை கடன் பெற்றுத் தரவில்லை. கமிஷனாக பெற்ற ரூ.1 கோடியையும் திருப்பித் தரவில்லை” என குறிப்பிட்டு இருந்தனர்.

இதனையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனை பெங்களூர் போலீசார் சென்னை வந்து கைது செய்து அவரை பெங்களூர் அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க