• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படிக்க சொல்லி பெற்றோர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

June 22, 2020 தண்டோரா குழு

ஆன்லைனில் பள்ளியில் கொடுக்கபட்ட வீட்டுப்பாடத்தை படிக்காமல் இருந்த மகளை பெற்றோர்கள் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் என் ஜி ராமசாமி வீதியை சேர்ந்தவர் நாராயணன், இவரது 16 வயது மகள் கனிஷ்கா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு பத்தாம் வகுப்புக்கான பாடங்களை ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார். அதற்கான பாடக்குறிப்புகள் பள்ளியிலிருந்து வாட்ஸப்பில் அனுப்பி வந்தனர். அதனை கனிஷ்கா கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் டிவியை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறபடுகிறது இந்நிலையில் அவரது பெற்றோர் அவரை படிக்குமாறு அறிவுரை கூறியதுடன் கண்டிக்கவும் செய்துள்ளனர் இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க