• Download mobile app
18 Mar 2026, WednesdayEdition - 3689
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்த காமெடி நடிகை மதுமிதா !

August 31, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை மதுமிதா தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையில் அவரின் கையை பிடித்து கடித்ததால் அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரை சீரியல், மற்றும் உதயநிதி, சந்தானம் ஆகியோர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தவர் காமெடி நடிகை மதுமிதா. இவர் தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்துக்கு வீட்டில் உஷா என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில், உஷா கோயம்பேட்டில் உள்ள காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் அளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது, எதிர்பாராத விதமாக காமெடி நடிகை மதுமிதா அந்த பெண்ணின் கையை பிடித்து கடித்து உள்ளார்.உடனே உஷா வலி தாங்க முடியாமல் நடிகையை கீழே தள்ளியுள்ளார், இதனையடுத்து இருவரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க