• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்

June 17, 2025 தண்டோரா குழு

வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைக்கு ஏற்ப ஆரோக்கியத்தையும் நல் வாழ்வையும் ஆதரிக்கும் முன்னணி நிறுவனமான ஆம்வே இந்தியா,நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் மூலம் அதன் ஊட்டச்சத்து வகைகளை வலுப்படுத்துகிறது.

அசெரோலாசெர்ரி,மஞ்சள்,அதிமதுரம் ஆகியவற்றின் இயற்கையான வலிமையை கொண்டு அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட தாவர அடிப்படையிலான சப்ளிமெண்ட் ஆகும் இது.இந்த திறன் வாய்ந்த செய்முறையில் மூன்று வகையில் செயல்பட்டு நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன:நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்துதல், அழற்சியை குறைத்தல்,குடல்,தோல் மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்திற்கு வலிமையான வகையில் ஆன்டிஆக்சிடன்ட் பாதுகாப்பை வழங்குதல்.

இந்த அறிமுகம் குறித்து ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ரஜ்னீஷ் சோப்ரா பின்வருமாறு கூறினார்:

“நாட்டின்ஒட்டு மொத்த ஆரோக்கிய பாதிப்பில் பாதி அளவு மோசமான ஊட்டச்சத்தால்தான் ஏற்படுகிறது. நல்வாழ்விற்கான சுத்தமான, தாவர அடிப்படையிலான தீர்வுகளின் தேவை இதற்கு முன்பு இவ்வாறு இருந்ததில்லை. இன்றைய நுகர்வோர் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். 52% மக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை சப்ளிமெண்ட்களில் தேடுகின்றனர்.

இது முழுமையான நல்வாழ்வுக்கான பரிந்துரைகளின் வளர்ந்து வரும் தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. நுகர்வோர் தேவைகளை மனதில் கொண்டு தயாரிப்புகளின் கண்டுபிடிப்பு முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கான எங்கள் உத்தி சார்ந்த வணிக முன்னுரிமையின் ஒரு பகுதியாக எங்கள் சமீபத்திய கண்டுபிடிப்பான ஆம்வேயின் நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தனித்துவமான செய்முறை நோய் எதிர்ப்பு ஆற்றல், குடல் மற்றும் சரும மேம்பாடுக்கு உதவும் அறிவியல் சார்ந்த பொருட்களை ஒன்றிணைக்கிறது.

இதை உட்கொள்பவதன் மூலம் நல்வாழ்வுக்காக ஒரு முன்னெச்சரிக்கை வாய்ந்த முழுமையான அணுகு முறையை மேற்கொள்ள முடியும்.ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அணுகு முறையுடன்,தனி நபர்கள் தங்கள் உடல் நலம் மற்றும் நல்வாழ்வைப் பராமரிக்கவும், தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும் உதவ ஆம்வேயை சார்ந்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். மக்கள் நீண்ட காலம் மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதும் எங்கள் நோக்கமாகும்.

” நிலையான, தாவர அடிப்படையிலான மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட ஊட்டச்சத்துத் தத்துவத்தை நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் உள்ளடக்கியுள்ளது.தினசரி வழங்குவதற்காகப் பரிந்துரைக்கப்படுள்ள ஒவ்வொரு செர்விங்கும் 100% வைட்டமின் சி-யை வழங்குகிறது. இது நோயெதிர்ப்பு ஆற்றலுக்கான ஆதரவை உறுதி செய்கிறது. இந்தச் செய்முறையில் பிரேசிலின் உபாஜாராவில் உள்ள சான்றளிக்கப்பட்ட இயற்கைப் பண்ணைகளில் இருந்து நிலையான முறையில் பெறப்பட்ட அசெரோலாசெர்ரி சாறுஅடங்கும் – இதில் நெல்லிக்காயை விட சுமார் ஏழு மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது இதில் 40 மி.கி மஞ்சள் சாறு (50 மடங்கு பச்சை மஞ்சளுக்கு சமம்) மற்றும் 167 மி.கி சான்றளிக்கப்பட்ட இயற்கைப் பண்ணைகளில் இருந்து பெறப்பட்டஅதிமதுர சாறு (ஆறு மடங்கு பச்சை அதி மதுரத்திற்கு சமம்) ஆகியவைஅடங்கும்.

இரண்டும் ஆற்றல் வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் நன்மைகளுக்கு பங்களிக்கின்றன. செயற்கைநிறங்கள், சுவைகள்அல்லது பதப்படுத்திகள் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த சிந்தித்து உருவாக்கப்பட்ட செய்முறையில் நோய் எதிர்ப்பு ஆற்றல்,குடல் மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு உதவும் பொருட்கள் உள்ளன.

மேலும் படிக்க