August 11, 2017
தண்டோரா குழு
அமெரிக்காவில் நாய் ஒன்று நோயால் பாதிக்கப்பட்ட வயதானவருக்கு அன்பையும் ஆதரவையும் தந்து வருகிறது.
அமெரிக்கா வாஷிங்டன்னில் கரோல் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய வீட்டிற்கு நாய் ஒன்று தினமும் அடிக்கடி வந்து சென்றுள்ளது. அது ஏன் என கரோல் கண்காணிக்க தொடங்கினர். அப்போது அந்த நாய், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்க்க வருகிறது என அவருக்கு தெரிய வந்தது.
அந்த நாய், கரோலின் தந்தை அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, அவர் அருகில் அமர்ந்திருக்கும்.
கரோலின் தந்தை ஒரு விதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை யாராவது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்நிலையில் அந்த நாயின் தின வருகையால் கரோலின் தந்தை மகிழ்ச்சியடைந்துள்ளார். அவர் அதனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார். அதன் பிறகு, அதை அன்புடன் தடவிய வண்ணம் அமைதியாக தூங்கி விடுவார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.